எனது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.புது,பொலிவுடன் சமுகபார்வை இணையத்தளம் உங்களை நாடி வருகிறது....

Tuesday, July 6, 2010

வெற்றிலை


மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி:

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி:

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்:

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்:

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

பீர்க்கங்காய்

சூடு சுபாவம் கொண்ட பீர்க்கங்காயில் பல வகைகள் உண்டு. இதில் சில வகைகள் கசக்கும். ஆகையால் சமையல் செய்யும் போது கொஞ்சம் சுவைத்துப் பார்த்து சமைக்க வேண்டும்.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.
பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும். சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது.

பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.

இஞ்சி


1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்.


முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்... வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்...

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன்
தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்
சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.

அன்னாசி


அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறத

தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

அத்திப்பழம்

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

அகத்திக் கீரை



அகத்திக் கீரையை உண்பவருக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்துக்கு ஒருமுறையேனும் தவறாமல் அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் தேகத்தில் உஷ்ணம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும். மலம், சிறுநீர் தாரளமாக கழியும். குடல் புண் ஆற்றும்.
அகத்திக்கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிட நோய்கள் அகலும்.

செடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு.


பொதுவாக அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிவப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என்று அழைக்கப்படுகிறது.

சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடம் செய்யும்.

இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.

காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.


சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.

இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்துதலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.

இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.

வல்லாரை

வல்லாரைக்கு சரஸ்வதி, பிண்டீரி, யோகவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்து குளத்தி, அசுர சாந்தினி போன்ற வேறு பெயர்களும் உண்டு. வல்லாரையில் அதன் இலைதான் மருத்துவ பயன் மிகுதியாக கொண்டது.

மருத்துவ பயன்கள்:

இது கற்பக மூலிகைகளில் ஒன்றாகும். வாய்ப்புண், அதிக இரத்தக் கழிச்சலால் உண்டாகும் ஆசனவாய்க் கடுப்பு, ஆசனவாய் எரிச்சல், யானைக்கால், நெறிகட்டுதல், மேகப்புண் ஆகிய நோய்களுக்கும் நல்லது.

வல்லாரை இலையை முறைப்படிக் பச்சையாய் உண்டால் அறிவு துலங்கும். வல்லாரைச் சாற்றில் உப்பும், சாதிபத்ரியும் சேர்த்துக் கொடுக்க பெருவயிறு, மகோதரம் முதலிய நோய்கள் நீங்கும். வல்லாரையை உணவில் துவையல் போன்று அடிக்கடி சேர்த்துவர உடலுக்கு வன்மையைத் தந்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி எந்த நோயும் நம்மை அணுகாமல் செய்யும்.

வல்லாரை தோல் நோய்களுக்கு, குறிப்பாகத் தொழுநோய்க்கு நல்லது.தோல் நோய் தொந்தரவுகள் இருப்பவர்கள் தொடர்ந்து வல்லாரையை பயன்படுத்தி வந்தால் தோல்நோய் வெகு சீக்கிரத்தில் அகலும். நினைவாற்றலை பெருக்கும் ஆற்றல் வல்லாரைக்கு அதிகம் உண்டு .எனவே இந்த வல்லாரை இலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக நான்கைந்து இலைகளை பறித்து உண்ணலாம்.

வல்லாரை இலை கசப்பு சுவை கொண்டிருப்பதனால் இதனை பச்சையாக வெறும் வயிற்றில் சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பச்சையாக தொடர்ந்து சாப்பிட முடியாதவர்கள் இந்த வல்லாரை இலையை பாடம் செய்து பொடியாக வைத்துக் கொண்டு பொடியினைக்கூட சாப்பிட்டு வெந்நீர் அருந்தலாம்.

மறதி நோயைக் கண்டித்து நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை மாணவர்களுக்கு ஒரு அரிய மூலிகையாகும். மூளையைப் பலப்படுத்து வதில் மிகவும் சிறந்தது இது. இன்று மருந்து கடைகளில் வல்லாரை கேப் ஸூல் நிறைய விற்பதிலிருந்து இதன் அரிய சிறப்பை நீங்கள்உணரலாம்.

வல்லாரையை முதலாகக் கொண்டு வல்லாரை எண்ணெய், வல்லாரை நெய் முதலிய சித்த மருந்துகளும் செய்யப்படுகின்றன.

வங்கி ரகசியம் : கிரடிட் கார்ட் நன்மை



நம்மிடம் பணம் இருக்கும் போது கிரடிட் கார்ட் பயண்படுத்தி ஏன் வாங்க வேண்டும் ? நீங்கள் கேட்பது சரி தான். ஆனால், எல்லா சமயமும் நம்மிடம் பணம் உள்ளதா... நிச்சயமாக இருக்காது. எதோ கடையை வேடிக்கை பார்க்க செல்கிறோம், அங்கு ஒரு புத்தகம் படித்து நமக்கு மிகவும் பிடித்து விடுகிறது.... வாங்க வேண்டும் என்று நினைகிறீர்கள். ஆனால் கையில் பணமில்லை. என்ன செய்வோம்.. வாங்காமல் வந்து விடுவோம். மீண்டும் அதை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும், அதே கடையில் வாங்வோம் என்பதில் நிச்சயமில்லை. நீங்கள் ஆசைப்பட்ட பொருள் வான்க முடியாமல் போகிறது. அந்த கடைக்காரனுக்கு விற்க பட வேண்டிய பொருள் விற்கமுடியாமல் போகிறது. இரண்டு பேருமே பாதிக்க படுகிறார்கள்.

ஆனால், நம் கையில் கிரடிட் கார்ட் இருந்தால், கார்ட்டை தெய்த்து விட்டு அந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு செல்லலாம். அந்த கடைக்காரனுக்கு வியாபாரம் நடக்கிறது. இதில் இரண்டு பேருக்குமே சந்தோஷம் தான்.

சரி ! கிரடிட் கார்ட் பயன்படுத்தி புத்தகம் வாங்கி விட்டீர்கள். ஆனால், அந்த பணத்தை வங்கியில் செலுத்தவில்லை என்றால் கடைக்காரன் நம்மிடம் வந்து கேள்வி கேட்பானா..? இல்லை. நீங்கள் வந்து வங்கியின் கிரடிட் கார்ட் பயன்படுத்தி பொருள் வாங்கினீர்களோ... அந்த வங்கி கடைக்காரனுக்கு பணம் கொடுத்துவிடும். நீங்கள் கடையில் பொருளை வாங்கி கிரடிட் கார்ட் தெய்து,கையெழுத்து போட்ட பிறகு உங்களுக்கு, அந்த கடைக்காரனுக்கும் சம்மந்தமில்லை. பொருளுக்கு தேவையான சர்வீஸ், வாராண்டி போன்றவைக்கு நீங்கள் கடைக்காரனிடம் கேட்கலாம். ஆனால், கடைக்காரன் அந்த பணத்தை பற்றி உங்களிடம் கேட்க மாட்டான். ஒரு மாதத்திற்குள் நீங்கள் வாங்கிய பொருளின் விலையை வங்கியில் செலுத்தி விட வேண்டும்.

உங்களுக்கு திடிர் என்று மூன்று நாள் பயணமாக வெளியூர் செல்கிறீர்கள். கையில் டிக்கெட் மற்றும் சிறிய அளவு தான் பணம் உள்ளது. விரும்புபவர்களுக்கு ஏதாவது வாங்க வேண்டும். டெபிட் கார்ட்டில் கூட பணமில்லை. அப்பொது நமக்கு ஆபத்பாண்டவனாக இருப்பது கிரடிட் கார்ட் தான்.

நீண்ட நாள் கழித்து நண்பர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். விருந்து கொடுப்பதாக சொல்லி ஹோட்டலில் இஷ்டத்துக்கு சாப்பிட்டாச்சு. பணம். கையில் இல்லை...!! இருக்கவே இருக்கிறது கிரடிட் கார்ட்.

இன்று கிரடிட் கார்ட், செல்போன் இரண்டும் தான் வேலை செய்பவர்களின் ஸ்டேடஸ் ஸிம்பில். சமிபத்தில் ஒரு தொலைக்காட்சியில் தனக்கு வர போகும் வருங்கால கணவன் கிரடிட் கார்ட் வைத்திருக்க வேண்டும். அதுவும் 'Add-on' கிரடிட் கார்ட். அதாவது கணவன் - மனைவி இருவரும் இரண்டு கிரடிட் கார்ட் வைத்திருப்பார்கள். ஆனால், மாதம் வரும் பில் மட்டும் ஒருவர் பெயரில் வரும். அதாவது கணவன் பெயரில் வரும். அது தான்... 'Add-on' கிரடிட் கார்ட். இன்று ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள அடிப்படையாக கிரடிட் கார்ட் இருக்கிறது.

கிரடிட் கார்ட் தெய்து பொருள் வாங்கி விட்டீர்கள் ? அது ஏமாற்று பொருள் வாங்கிய பிறகு தான் தெரிந்தது. அதனால், கிரடிட் கார்ட்டுக்கு பணம் கட்டாமல் இருக்க முடியுமா ? முடியாது. வங்கியிடம் அந்த கடைக்காரனுக்கு பணம் கொடுக்க கூடாது என்று சொல்லவும் முடியாது. வங்கி எப்படியும் அந்த கடைக்காரனுக்கு பணம் கொடுத்துவிடும். நீங்கள் வாங்கி கடையில் பேசி பொருளை கொடுத்து பணத்தை பெற்றால் தான் உண்டு. நீங்கள் ஏமாறியதற்கு எந்த வங்கியும் (கிரடிட் கார்ட் வங்கி) பொறுப்பு ஏற்றுக் கொள்ளாது.

கிரடிட் கார்ட்டில் செலவு செய்த பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டிவிட்டால் பண கஷ்டத்திற்கு உதவும் நண்பனாக இருக்கும். பணம் கட்ட தவறிவிட்டால் பண நெருக்கடி கொடுப்பதில் முதல் எதிரியாக இருக்கும்.

வங்கி ரகசியம் : கிரடிட் கார்ட் வகைகள்

'கேஷ் பேக்' (Cash back) கிரடிட் கார்ட் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். 100 ரூபாய் கொடுத்து பொருள் வாங்கினால் 5 ரூபாய் நமக்கு திருப்பி கொடுப்பார்கள். அதனால் பெரும்பாலும் 'கேஷ் பேக்' வாங்க விரும்புவார்கள். இன்னும் விழாக்காலங்களில் ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் கிரடிட் கார்ட் பயன்படுத்த பல சலுகைகள் எல்லாம் கொடுப்பதாக விளம்பரம் செய்வார்கள். அதில் எத்தனையோ நிபந்தனைகள் எல்லாம் உண்டு என்பதை புரிந்துக் கொள்ளாமல் பொருளை வாங்குவார்கள். எந்த லாபமும் இல்லாமல் வங்கிகள் 30% cash back என்று விளம்பரம் செய்யாது. அந்த விளம்பரத்தை கவனித்தால் அதில் கூட Condition Apply என்று இருக்கும்.



இதிலும் கன்டிஷனா...? ஆமாம். அப்படி என்ன கன்டிஷன் ? அதை மிக சின்ன எழுத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பரும்பாலும் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு அந்த விளம்பரத்தில் 30,000 ரூபாய் மேல் வாங்கினால் தான் 30% தள்ளுபடி கொடுப்போம் என்று இருந்தால் என்ன செய்வீர்கள்....?

'கேஷ் பேக்' கிரடிட் கார்ட் நடக்கும் நம் கண்ணுக்கு தெரியாத சில நிபந்தனைகள் இப்படி தான் இருக்கும். நியாயமாக பார்த்தால் வங்கிகள் அதிகபட்சம் தன் லாபத்தில் இருந்து 5% சதவீதம் 'கேஷ் பேக்'காக கொடுக்கலாம். 30%,50%.... இன்னும் சில கிரடிட் கார்ட் 100% (cash back) என்று சொன்னால் நிச்சயமாக சில நிபந்தனைகள் இருக்கும். கவனமாக பார்க்கவும்.

'கேஷ் பேக்' அடுத்து பலரும் வைத்திருப்பது 'பெட்ரோ கார்ட்' (Petro Card). வண்டிக்கு பெட்ரோலுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக கிரடிட் கார்ட்டில் வாங்குவது தான் 'பெட்ரோ கார்ட்'. அதாவது, சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் இன்டியன் ஒயில் பெட்ரோல் வாங்கினால் சர்ச்சார்ஜ் (Surcharge) கிடையாது. ஆனால், அதே இன்டியன் ஒயிலை HSBC கிரடிட் கார்ட் பயன்படுத்தினால் சர்ச்சார்ஜ் போடுவார்கள். அதே போல் ஷேல் பெட்ரோல் HSBC கார்ட்க்கு சர்ச்சார்ஜ் கிடையாது.

அடுத்து இன்னொரு வகையான கிரடிட் கார்ட் பார்ப்போம். Travelling Card அடிக்கடி விமானத்தில் பயணம் / ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்த கிரடிட் கார்ட் பயன்ப்படும். உதாரணத்திற்கு சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் வைத்து ஜெட் எர்வேஸ்யில் டிக்கெட் வாங்கி பயணம் செய்தும் போது சில சிறப்பு சலுகைகள்கள் கிடைக்கும். ஆனால், பெரும் பாலான வங்கிகள் சலுகை என்று சொல்லுவது ' Travelling Card யில் டிக்கெட் வாங்கிய பணத்திற்கு தான் சலுகை பொருந்தும். எதாவது பொருளை வாங்கினால் சலுகை எதுவும் இருக்காது. பெட்ரோ கார்ட்டிலும் அப்படி தான். சலுகை எல்லாம் பெட்ரோல் வாங்குவதற்கு மட்டும் தான்.


அடுத்து நாம் பார்க்க போவது Shopping Card. பெயர கேட்டவுடனே அதிருதுல....!! இந்த கார்ட் மனைவிமார்களுக்கு மிகவும் பயன்ப்படும் கார்ட்.(கணவன்மார்களுக்கு தொல்லை கொடுக்கும் கார்ட் கூட !!) மாதம் வீட்டிற்கு என்று இவ்வளவு பொருள் வாங்க வேண்டும் எல்லோர் வீட்டில் இருக்கும். Shopping Card பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது வங்கிகள் சில அன்பளிப்பு, சலுகை என்று கொடுக்கும்.

இதுவரை நாம் கிரடிட் கார்ட் வகைகள் மட்டும் தான் பார்த்தோம். ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர் எற்றாருக்கு போல் கிரடிட் கார்ட் வைத்திருக்கும். கிரடிட் கார்ட் அம்சங்களும் மாறி இருக்கும். வாடிக்கையாளரை கவர்வதற்காக கிரடிட் கார்ட் தன்மைகளையும், சலுகைகளும் வேறுப்படும். ஒவ்வொரு கிரடிட் கார்ட் இப்படி தான் இருக்க வேண்டும் என்று எந்த நீதி கிடையாது. அதனால் கிரடிட் கார்ட் வாங்கும் எது நமக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்துக் கொண்டு வாங்க வேண்டும்.

கிரடிட் கார்ட் செய்ய வேண்டியவை, வேண்டாதவை !!

Do’s and Don’ts என்ற புரிதல் இல்லாமல் வாழ்க்கையில் எதிலும் சிறப்பாக நம்மால் செய்ய முடியாது. அலுவலகம், போக்குவரத்து, விளையாட்டு என்று எதை எடுத்துக் கொண்டாலும் Do’s and Don’ts என்று சில விதி முறைகள் இருக்கும். இதில் கிரடிட் கார்ட் மட்டும் விதிவிளக்கல்ல.



கிரடிட் கார்ட் செய்ய வேண்டியவை, வேண்டாதவை !!

1. கிரடிட் கார்ட் வாங்கியதும் உங்கள் கையெழுத்தை கார்ட்டின் பின் பக்கம் குறிப்பிட்ட இடத்தில் போடுங்கள். போதுவாக வங்கி கிரடிட் கார்ட் கொடுக்கும் போதே கையெழுத்து போட வேண்டும் என்று சொல்லுவார்கள். அவர்கள் சொல்ல மறந்தாலும், கிரடிட் கார்ட் வாங்கிய கையோடு கையெழுத்து போட்டுவிடுவது நல்லது.

ஒரு வேளை, கையெழுத்து போடாமல் கிரடிட் கார்ட் தொலைத்திருந்தால், அந்த கிரடிட் கார்ட் யாராவது பொருள் வாங்கியிருந்தால் அதற்கு பணம் கட்ட வேண்டிய பொருப்பு உங்களுடையது தான்.

2. பின் (PIN) நம்பரை எங்கும் எழுதி வைக்க வேண்டாம். கிரடிட் கார்ட் பின் நம்பரை கிரடிட் கார்ட் பின் பக்கம் எழுதி வைப்பதோ அல்லது மோபைல் போனில் வைத்திருப்பதோ நல்லதல்ல. நன்கு பரிச்சயமான அல்லது நினைவில் வைத்துக் கொள்ளுவது போல் எண்களை பின் நம்பராக வைத்துக் கொள்ளுங்கள்.

3. கிரடிட் கார்ட்டின் ஜெராக்ஸ் காப்பியை யார் கேட்டாலும் கொடுக்காதீர்கள். கிரடிட் கார்ட்டின் பின் பக்கம் 'CVV' (card verification value) எண் இருப்பதால் அதை வைத்துக் கொண்டு இணையதளத்தில் உங்கள் பெயரில் என்ன பொருள் வேண்டுமானாலும் வாங்க முடியும்.

4. இணையதளத்தில் பொருள் வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். சில ஷாப்பிங் இணையதளங்கள் மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லுவார்கள். இப்படி பாதுகாப்பானவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் எல்லா தளங்களும் பாதுகாப்பானதாக இருக்காது.

இந்த இணையதளம் பாதுகாப்பானது என்று சான்றிதழ் வாங்கியிருந்தால் மட்டும் அந்த தளத்தில் பொருள் வாங்க உங்கள் கிரடிட் கார்ட் விபரத்தை கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, 'VeriSign' - ஒரு தளத்தை பாதுகாப்பானது என்று சொல்லிவிட்டால் தாராளமாக பொருள் வாங்கலாம் என்று பயன்படுத்துபவர்களின் நம்பிக்கை. அப்போது அவர்கள் அந்த தளத்திற்கு பாதுகாப்பு சான்று கொடுத்திருக்கிறார்களா என்று பார்த்து, உங்கள் விபர்த்தை கொடுக்கவும்.

5. நீங்கள் சந்தேகப்படும் எந்த இணையத்தளத்திலும் உங்கள் கிரடிட் கார்ட் பற்றிய விபரத்தை கொடுக்க வேண்டாம். நல்ல பழக்கப்பட்ட, நம்பிக்கையான இணையத்தில் மட்டும் உங்கள் கிரடிட் கார்ட் விபரத்தை கேட்டால் கொடுங்கள்.

6. யாராவது போன்னில் தொடர்பு கொண்டு உங்கள் கிரடிட் கார்ட் விபரத்தை, குறிப்பாக பின் பக்கம் இருக்கும் மூன்று எண்கள் பற்றி கேட்டால் எந்த விபரத்தை சொல்லாதீர்கள்.

வங்கியில் பணிபுரிபவர்கள் உங்களிடம் தொலைப்பேசி அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு கிரடிட் கார்ட் விபரத்தை கேட்க மாட்டார்கள். அப்படி யார் கேட்டாலும், எந்த தகவல் கொடுக்காமல் தொடர்பை துண்டிப்பது நல்லது.

7. கடைக்காரணிடம் கிரடிட் கார்ட் கொடுத்து மிஷினில் தெய்ப்பதை நீங்கள் ஒரு கண் பார்த்து கொள்வது நல்லது. உங்கள் கிரடிட் கார்ட்டை ஒரு முறை தெய்க்கிறானா அல்லது உங்கள் தகவல் பார்ப்பது போல் கிரடிட் கார்ட் மெஷின் வைத்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

நிங்கள் கையெழுத்து போட்டு கடைக்காரன் கொடுத்த பேப்பரில் நீங்கள் வாங்கிய பொருளின் விலையை அதில் உள்ளதா என்று சரி பார்த்துக் கொண்ட பிறகு கையெழுத்து போட வேண்டும். நீங்கள் கையெழுத்து போட்ட பேப்பரை கடைக்காரனிடமும், அதன் நகல் உங்களிடமும் கொடுக்கப்படும். உங்களிடம் கொடுக்கப்படும் நகலை தூக்கி எறியாமல் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். மாத இறுதியில் உங்களுக்கு அனுப்பப்படும் கணக்கு விபரத்தோடு (Statement) நீங்கள் வாங்கிய பொருள்களின் விலையையுடன் ஒத்துப் போகின்றனவா பாருங்கள். மாத கணக்கு விபரத்தில் அதிகமாக பணம் குறிப்பிட்டு இருந்தால், வங்கியை தொடர்ப்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.

நீங்கள் விருப்பப்பட்டால் நீங்கள் வைத்திருக்கும் கிரடிட் கார்ட்டுக்கு இன்ஷூரன்ஸ் கூட எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை நீங்கள் கிரடிட் கார்ட் தொலைத்திருந்தால், தொலைத்த நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் (உதாரணத்திற்கு) கிரட்டி கார்ட்டை பயன்படுத்தி யார் எந்த பொருள் வாங்கியிருந்தாலும் இன்ஷூரன்ஸ் க்ளைம் பண்ணலாம். ஆனால், கிரடிட் கார்ட் தொலைந்து விட்டால் சும்மா இருந்து விட கூடாது. வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு உங்கள் கிரடிட் கார்ட் 16 இலக்கு எண்களை சொல்லி யாரும் பயன்படுத்த முடியாதப்படி தடுக்க வேண்டும்.

இவை எல்லாம் கிரடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் அடிப்படையாய் தெரிந்துக் கொள்ள வேண்டிய விபரங்கள். கார்ட்டை பயன்படுத்த பயன்படுத்த உங்களுக்கு பல அனுபவங்கள் அதிகமாக சொல்லிக் கொடுக்கலாம்.

கிரடிட் கார்ட் - வங்கி பாதுகாப்பு வளையம்

கிரடிட் கார்ட் வந்த புதிதில் அதன் 16 இலக்கு நம்பர் மற்றும் காலவதியாகும் மாதம் / வருடம் போன்ற விபரங்களை சிதம்பர ரகசியம் போல் காக்க வேண்டும். அந்த நம்பர், மற்ற விபரங்கள் வேறுயாருக்காவது தெரிந்துவிட்டால் போதும், யார் வேண்டுமானாலும் அதை வைத்துக் கொண்டு என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். இணையதளத்தில் யார் என்ன பொருள் தேவையோ வாங்கிவிடலாம். இப்படி கிரடிட் கார்ட் வாங்கி விட்டு தேவையில்லாமல் தொல்லையில் மாட்டியவர்கள் பலர். பணத்தை காப்பதை விட கிரடிட் கார்ட்டை பத்திரமாக பாதுகாக்க வேண்டியிருந்தது. கார்ட்டை தேய்க்க கடைக்காரனிடம் கொடுக்க கூட பயந்தனர். இதனாலே, பலர் கிரடிட் கார்ட் வாங்குவதற்கு அஞ்சினார்கள்.

இப்போது வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் ஒவ்வொரு கிரடிட் கார்ட்டுக்கும் 'CSC/CVV' என்ற மூன்று நம்பர் இருக்கிறது. இந்த எண்கள் கிரடிட் கார்ட் பின்புறத்திலேயே இருக்கும். பெரும்பாலும், இந்த எண்கள் தொலைப்பேசி மூலம் வங்கி சேவை நாடும் போதும், இணையதளத்தில் பொருள் வாங்கும் போதும் பயன்ப்படும்.



CSC / CVV என்றால் Card Verification Value / Card Security Code. இந்த மூன்று இலக்கு எண்கள் பெரும்பாலும் தொலைப்பேசி வங்கி சேவையிலும், இணையதளத்திலும் அதிகம் பயன்ப்படும். அதாவது, யார் கையில் கிரடிட் கார்ட் உள்ளதோ, அவர்கள் தான் தனக்கு சொந்தமாக பொருள் வாங்குகிறார் என்பதை சொல்லுவதற்கு இந்த எண்ணை பயன்படுத்துவார்கள்.

இந்த தகவலை எல்லாம் ஒரு பேப்பரில் குறிப்பு எடுத்துக் கொண்டு நம் பெயரில் யாராவது இணையத்தில் வாங்க முடியாதா என்று கேட்டால், கண்டிப்பாக முடியும். அதனால், கிரடிட் கார்ட் தேய்க்கும் போது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வது நல்லது.

ஒரு சில வங்கிகள் தன் வாடிக்கையாளர் கிரடிட் கார்ட் விபரத்தை திருடி இணையத்தில் வாங்க நினைத்தாலும், அதை தடுக்க பாதுகாப்பு வளையம் வைத்துள்ளது. உதாரணத்திற்கு, உங்கள் பெயர், கிரடிட் கார்ட் காலவதி மாதம், வருடம்,'CSC' எண் என்று எல்லா குறிப்புகள் எடுத்துக் கொண்டு இணையத்தில் வாங்க நினைத்தால், Secret Pin அல்லது 'Authorization Code' என்று கிரடிட் கார்ட் உரிமையாளிரின் செல்போனுக்கு அனுப்புகிறார்கள். இதனால் எல்லா தகவல் திருடினாலும் திருடனால் ஒன்றும் செய்யமுடியாது. இது போன்ற சேவையை எல்லா வங்கிகளும் எல்லா கிரடிட் கார்டுக்கும் தருவதில்லை. குறிப்பிட்ட ஒரு சில வங்கிகளே இது போன்ற சேவைகளை வழங்குகிறது.

ஒரு சில வங்கிகள் தன் வாடிக்கையாளர் 5000 ரூபாய் மேல் பொருள் வாங்கினால், கிரடிட் கார்ட் உரிமையாளர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். (SMS) அனுப்பி விபரத்தை உறுதி செய்துக் கொள்வார்கள். சில சமயம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கிரடிட் கார்ட் உரிமையாளர் தான் பொருள் வாங்கினாரா என்று உறுதி படுத்திக் கொள்வார்கள். ஒரு வேலை நீங்கள் எந்த பொருள் வாங்கவில்லை என்றால், வாடிக்கையாளர் சேவை தொடர்புக் கொண்டு தெரிவிக்க வேண்டும்.

அதே சமயம் வங்கியால் எல்லா வர்த்தக நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாது. அதனால் பெரிய அளவில் வாடிக்கையாளர் வாங்கும் போது இது போன்ற சேவையை வழங்குகிறது.

இப்படி வங்கிகள் தன் வாடிக்கையாளர் கிரடிட் கார்ட் சேவை பல பாதுகாப்பு வளையம் வைத்திருந்தாலும், கிரடிட் கார்ட் பார்த்த மாத்திரத்தில் போலி கிரடிட் கார்ட் தயாரிக்கும் நுதன திருடர்கள் இருக்க தான் செய்கிறார்கள்

Monday, July 5, 2010

சமுகமபார்வை பற்றி சிறிய அறிமுகம்


5-தையும் 5-தையும் கூட்டினால் என்ன வரும்? டீச்சர் இப்படி கேட்டதும் நர்சரி பள்ளியில்( Nursery School ) படிக்கும் அந்த 4 வயது பையன் தன் கைவிரல்களை ஒவ்வொன்றாக மடக்கி...கடைசியில் 10 என்று விடையளித்தான்.

அதே சிறுவனிடம் கொஞ்ச காலம் சென்ற பிறகு... குத்து மதிப்பு என்றால் என்ன? என்று கேட்ட போது.... அந்த சிறுவன் தன் கைகளை மடக்கி ஓங்கி அவர் கண்ணத்தில் விட்டான்....

அய்யோ... என்ன இது? என்ன செய்கிறார் என்றhர் ஆசிரியர் கண்ணத்தை தடவியப்படி....
குத்து மதிப்பு ஐந்து என்றhன்...
அந்த ஆசிரியரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

இப்படி தான் இருக்கிறது சமுகம். பள்ளியில் கிடைக்காத பாடங்கள் சமுகம் தானாகவே கற்று கொடுத்து விடுகிறது. அடி... மிதி.... குத்து இது தான் கலாசாரம்....

பிஞ்சு மனசில இது போன்ற விதைககளை விதைத்து... அதில் குளிர் காயலாமா?

மொபைல் போன் பயன்படுத்தினால் மூளையில் கேன்சர் வருமா?


மொபைல் போன் பயன்படுத்தினால், மூளையில் கேன்சர் வருமா? இந்த கேள்வி இன்னும் விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பொருளாகவே இருந்து வருகிறது.

Food and Drug Administration மற்றும் CTIAThe Wireless Association போன்ற அமைப்புகள் புற்று நோய் உருவாக்கும் அளவிற்கு, மொபைல் போனிலிருந்து கதிர்வீச்சு இருப்பதில்லை என்று கூறுகின்றனர்.

ஆனால் Environmental Working Group (EWG) மற்றும் World Health Organization (WHO) ஆகிய அமைப்புகள் பத்து ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போன்களைப் பயன்படுத்தினால், மூளை மற்றும் எச்சில் சுரப்பியில் புற்றுநோய்க்கான கட்டிகள் வர வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளன.

மேலும் ஒருவரின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் வரவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளன. குறிப்பாக வளரும் பருவத்தில் உள்ள மூளை உடைய சிறுவர்களிடம் இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன. இன்னும் இரண்டு அமைப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன.

எது எப்படி இருந்தாலும், இத்தகைய சூழ்நிலையில் நாம் எப்படி இயங்க வேண்டும். மொபைல் போன்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்ட நிலையில், எந்த அளவிற்கு அதன் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாமே!

1. குறைவான கதிர்வீச்சு உள்ள போன்: மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்(SARSpecific Absorption Rate) என்று ஒரு அளவைக் கூறுகின்றனர். மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடியோ அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன.

இதனை நம் உடல் தசைகள் உறிஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியாகிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனுக்கும் ஒருSAR ரேட் உண்டு. இந்த SAR ரேட் அதிகமாக இருந்தால், போனின் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும்.

உங்கள் போனின் பேட்டரிக்குக் கீழாக, போனுடைய FCC (Federal Communications Commission) எண் தரப்பட்டிருக்கும். FCC யின் இணைய தளம் சென்று, உங்கள் போனின் FCC எண் கொடுத்து அதன் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம்.

EWG.org என்ற தளத்தில், மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் அடங்கிய டேட்டா பேஸ் உள்ளது. அங்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனின் அபாயத் தன்மையினை அறிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் சாம்சங் நிறுவனத்தின் இம்ப்ரஸன் (Impression) என்னும் போன் தான் மிக மிக குறைவான கதிர்வீச்சு உடையது.

மோட்டாரோலாவின் மோட்டோ வியூ 204 மற்றும் டி–மொபைல் மை டச் 3ஜி ஆகியவை அதிக கதிர் வீச்சு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான மொபைல் போன்களில் மோட்டாரோலா ட்ராய்ட், பிளாக்பெரி போல்ட் 9700, எச்.டி.சி. மேஜிக் மற்றும் எல்.ஜி.சாக்லேட் டச் ஆகியவை அதிகமான கதிர்வீச்சு உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆண்டு போன்களில் மிகவும் குறைவாக கதிர்வீச்சு உள்ளவையாக மோட்டாரோலா ப்ரூட் ஐ680, சாம்சங் மிதிக், பான்டெக்ஸ் இம்பேக்ட் (Motorola Brute i680, Samsung Mythic, and Pantech Impact) அறிவிக்கப்பட்டுள்ளன. (இவற்றில் சில இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வராமல் இருக்கலாம்) எனவே நீங்கள் வாங்கும் போன் குறைவான கதிர்வீச்சு உள்ளதாக வாங்குவது நலம்.

2. ஹெட்செட் / ஸ்பீக்கர்: போனுடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கரை இணைத்துப் பயன்படுத்துவது பயன் தரும். ஏனென்றால் போனை உடலுடன் ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து இயக்குவதனால், போன் கதிர் வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

3. அதிகம் கேள், குறைவாகப் பேசு: போனில் நாம் பேசும் போதும், டெக்ஸ்ட் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதிகம் இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும் போது இது குறைவாக இருக்கும். எனவே குறைவாகப் பேசுவது நல்லது.

4. பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சினைக் காட்டிலும், டெக்ஸ்ட் அனுப்புகையில் குறைவான வீச்சே இருக்கும். எனவே அதிகம் டெக்ஸ்ட் பயன்படுத்தவும்.

5. சிக்னல் வீக்? மூடிவிடு: உங்கள் போனுக்கான சிக்னல் குறைவாக இருந்தால், உங்கள் போன் ஒலி அலையைப் பெற முயற்சிக்கையில் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே அப்போது பேச முயற்சிப்பதை நிறுத்தி, பின் சிக்னல் அதிகமாக இருக்கையில் பேசவும்.

6. சிறுவர்களே கவனம்: சிறுவர்களின் உடல் மற்றும் மூளை பெரியவர்களைக் காட்டிலும் அதிகம் மொபைல் கதிர்வீச்சின் பாதிப்புக்குள்ளாகும். எனவே சிறுவர்களை மொபைல் பயன்படுத்து வதிலிருந்து தடுக்கவும்.

7. மூடிகளா? வேண்டாம்: மொபைல் ஆன்டென்னா மூடி, கீ பேட் மூடி போன்றவை போனுக்கு வரும் சிக்னல்களை ஓரளவிற்குத் தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப் பெற உங்கள் போன் அதிக கதிர்வீச்சினை அனுப்பும். எனவே இந்த வகை மூடிகளைப் பயன்படுத்துவதனைத் தடுக்கவும்.

அறிவியல் சாதனங்கள் நம் வாழ்வில் வளம் சேர்த்தாலும், இது போல ஆபத்துக்களையும் தாங்கியே வருகின்றன. நாம் தான் இத்தகைய இடர்ப்பாடுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்

கிரிக்கெட் விளையாட்டின் வரலாறு

பதினாறாம் நூற்றாண்டு முதல் இன்று வரை கிரிக்கெட் விளையாட்டு எல்லாரும் அறிந்த வரலாற்றுப் பாதையைக் கொண்டுள்ளது. 1844 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும், கிரிக்கெட்டின் அங்கீகரிக்கப்பட்டுள்ள வரலாறு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்ட ஆண்டிலிருந்து தான் அதாவது 1877 ஆம் ஆண்டில் தான் துவங்கியது. இந்த காலக்கட்டங்களில் இங்கிலாந்தில் மட்டும் விளையாடப்பட்டு வந்த ஆட்டம் தற்போது, பொதுநலவாய நாடுகள் எங்கும் விளையாடப்பட்டு வருகின்றது.


ஆரம்பகால கிரிக்கெட்

பிறப்பிடம்

கிரிக்கெட் எங்கு ஆரம்பித்தது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது யாராலும் அறியப்படாத ஒரு உண்மை ஆகும். கிரிக்கெட் தோற்றத்திற்கு எந்த வித பலமான ஆதாரமும் இல்லை என்றாலும், இந்த விளையாட்டு சாக்சன் அல்லது நார்மன் காலத்தில், வேல்ட் என்ற அடர்ந்த காடுகள் மற்றும் சம வெளிகளில் (இங்கிலாந்துக்கு தென் மேற்கு பகுதி மற்றும்கென்ட், சச்செக்சுக்கு அருகில்) வாழ்ந்த சிறுவர்களால் விளையாடப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது. இடைக்காலங்களில் வேல்ட் பகுதியின் மக்கள் தொகை சிறு வேளாண்மைத் தொழிலிலும், உலோகப் பொருட்களை கொண்டு வேலை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டிருந்தது. பதினேழாம் நூற்றாண்டுவரை பெரிதும் குழந்தைகள் விளையாட்டாக இருந்து வந்த கிரிக்கெட், இந்த நூற்றாண்டில் பெரியவர்களாலும் விளையாடப்பட்டது.[1].


குழந்தைகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிர்க்கெட் விளையாட்டு, பல தலைமுறைகளுக்கு அவ்வாறே இருந்து வந்தது. 17 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் பெரியவர்கள் இந்த ஆட்டத்தை ஆடினார்கள் என்று நம்மால் கேள்விப்பட முடியவில்லை. பவுல்ஸ் மிக பழமை வாய்ந்த ஆட்டம் என்பதால், கிரிக்கெட் பவுல்சில் இருந்து பிறந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. ஒரு பந்து அதன் இலக்கை அடைவதற்கு முன்னர் மட்டையை வைத்திருக்கும் ஒருவன் அதனை தடுத்து இலக்கில் இருந்து தள்ளிப்போகும் அளவுக்கு அந்த பந்தை இந்த ஆட்டத்தில் அடிக்கவேண்டும். ஆடு மேயும் இடங்களிலும், சம வெளிகளிலும் விளையாடப்பட்டு வந்த இந்த ஆட்டம், ஆரம்பத்தில் செம்மறி ஆட்டிலிருந்து எடுக்கப்பட்ட கம்பிளி உருண்டைகளை பந்தாகக் கொண்டும், (அல்லது ஒரு கல் அல்லது இரு சிறிய மரத்துண்டு); ஓர் குச்சி அல்லது ஒரு வளைந்த கோலைக் கொண்டோ அல்லது பண்ணையில் இருக்கின்ற ஒரு கருவியை மட்டையாக பயன்படுத்தி விளையாடினர்; மற்றும் முக்காலி, ஒரு மரத்ததண்டு, வாயிற்கதவு (எ.கா., விக்கெட் கேட்) ஆகியவற்றை விக்கேடாக பயன்படுத்தினர். [2].


"கிரிக்கெட்" என்ற பெயர் வந்ததன் காரணம்

"கிரிக்கெட்" என்ற சொல்லுக்கு நிறைய மூலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பழமை வாய்ந்த ஆட்ட வரலாற்றில் அதாவது 1598 ஆம் ஆண்டில் இந்த விளையாட்டு,(கீழே பார்க்கவும் ) கிரேக்கேட் என்று அழைக்கப்பட்டது. இடைக்கால டச் மொழியில் கிரிக் (-எ ), என்ற சொல் குச்சி என்ற பொருள் தரும்; மேலும் தொன்மை ஆங்கிலத்தில் கிரிக் அல்லது க்ரைசி ஊன்று கட்டை அல்லது கம்பு என்ற போருளைத்தருகின்றன.[2]. கிரிக்ஸ்டேல் என்ற இடைக்கால டச் சொல், நீண்ட குறைந்த உயர முக்காலிகளைக் குறிக்கிறது. இவை தேவாலயங்களில் முட்டிப்போட்டு வேண்ட உதவியாக இருந்தன. இந்த முக்காலியைப் போலவே இரண்டு தண்டுகள், விக்கெட் வீழ்த்த ஆரம்ப கிரிக்கெட்டில் உபயோகப்படுத்தப் பட்டது.


போன் பல்கலை கழகத்தை சேர்ந்த ஹெயனர் கில்மெய்ச்டார் என்ற மொழியியலாளர்,"கிரிக்கெட்" இடைகால டச் மொழி மெட் தே (க்ரிக் கேட்)சென் (அதாவது, "குச்சி துறத்தலை கொண்டு "), என்ற சொல்லை கொண்டு உருவானது என்று குறிப்பிடுகிறார். இது ஆட்டத்தில் உள்ள டச் தொடர்பை குறிக்கிறது. இன்னொரு வழியில் பார்க்கப்போனால் கவுண்டி ஆப் பிளான்டர்ஸ், டச்சி ஆப் பர்கண்டி உடன் வணிக தொடர்பு கொண்டிருந்த போது இடைக்கால டச் [3]சொற்கள் தென் கிழக்கு இங்கிலாந்துக்குள் ஊடுருவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[4].


ஆதாரப்பூர்வமான முதல் குறிப்பு

படிமம்:RGS old building.jpg
கில்போர்டில் உள்ள தி ராயல் கிராம்மர் ஸ்கூலில் ஜான் டெரிக் க்ரேக்கட் ஆடினார்.

இதற்கு முன்னர் ஏகப்பட்ட குறிப்புகள் இருந்தாலும், 1598 ஆம் ஆண்டு ஒரு பள்ளியில் இருந்த ஒரு நிலத்தின் மேல் இருந்த உரிமை பிரச்ச்சனியாயால் எழுந்த சட்ட வழக்கு மூலம் இந்த ஆட்டத்தை பற்றிய குறிப்பு அதிகாரப்பூர்வமாக முதல் முதலில் பதிவாகி உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், குறிப்பிடப்பட்டுள்ள நிலப்பகுதியில் அவரும் அவரது நண்பர்களும், அவர் பள்ளியில் க்ரேக்கட் விளையாடியதாக ஒரு 59 வயதான ஜான் டெறிக் சாட்சியம் அளித்தார், இவர் இறப்புகளை பரிசோதனை செய்யும் ஒரு ஆய்வாளர். இந்த பள்ளி ராயல் கிராம்மர் ஸ்கூல், கில்ட்போர்ட் ஆகும், மேலும் திரு. டெறிக்கின் சாட்சியம் இந்த விளையாட்டு சர்றேவில் 1550 ஆம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருங்கின்றது என்று ஐயம் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.[5].


முதன் முதலில் பெரியவர்கள் விளையாடியதாக இருந்த குறிப்பு 1611 ஆம் ஆண்டைக் காட்டியது. சச்செக்சில் இரண்டு பேர், தேவாலயத்துக்கு செல்லாமல் ஞாயிற்றுக்கிழமை அன்று கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்ததாக பதிவாகி இருந்தது. [6]. அதே ஆண்டில், கிரிக்கெட் பற்றி இருந்த அகராதி குறிப்பு அதனை சிறுவர்களின் விளையாட்டு என்று குறிப்பிடுகின்றது. இதனால் கிரிக்கெட் பெரியவர்களால் ஒரு சிறு காலத்திற்கு முன்னர் தான் விளையாட ஆரம்பித்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.[5].

பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பக்காலம்

கிரிக்கெட் பெரியவர்களால் விளையாடப்பட்டது என்பதை குறிக்க ஆங்கிலேய உள்நாட்டுப் போர் வரை நிறைய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்த ஆடம் சமய தலைவர்கள் வட்டாரத்தில் விளையாடப்பட்டது என்பதை சொல்கின்ற குறிப்புகள் இந்த ஆட்டம் மாவட்ட ரீதியாக விளையாடப்பட்டது என்பதை குறிக்க மறுக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த ஆட்டத்தை மையமாகக் கொண்டு ஆடிய தீவிர சூதாட்டங்களைப் பற்றியும் எந்த வித குறிப்பும் இல்லை. இதனால் பதினேழாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை கிராமங்களில் மட்டுமே கிரிக்கெட்ஆடப்பட்டது என்றும் மாவட்டங்களில் கிரிக்கெட் ஆடப்படவில்லை என்றும் கருத்தில் கொள்ளப்படுகிறது.[1]

பொதுநலவாயம்

1648 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிந்தவுடன் புதிய புனிதர்களின் அரசாங்கம் சட்ட ஒழுங்கில்லாத கூட்டுகளை ஒடுக்கியது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது கால்பந்து போன்ற விளையாட்டுகளை அடியுடன் ஒடுக்கியது. இதற்கு முன்னர் இருந்ததை விட ஓய்வு நாளை ஒழுங்கான முறையில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சட்டங்களைக் கொண்டுவந்தது. கீழ் தர மக்களுக்கு ஓயுவுநாள் மட்டும் தான் ஒழிந்திருந்த நாளாக இருந்தது. ஆதலால் இந்த பொதுநலவாய நாட்கள் பொழுது கிரிக்கெட்டின் ஆதிக்கம் சரிந்து இருந்தது. இப்படி இருக்கையில், கட்டணம் செலுத்தி பொதுப் பள்ளிகளுக்கு சென்றவர்கள் கிரிக்கெட்டை தடை இன்றி வின்செஸ்டர், புனித பால் போன்ற பள்ளிகளில் விளையாடினர். ஒலிவர் க்ரோம்வேல்லின் அரசாங்கம் கிரிக்கெட்டை தடை செய்தது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அரசாட்சிக்கு இடைப்பட்ட காலத்தில் அரசாட்சி புரிந்தவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை ஓய்வுநாளுக்கு இழுக்கு என்று கூறி தடை விதிக்கவில்லை.[1].


சூதாட்டமும் செய்தியாளர்களும்

1660 ஆம் ஆண்டு, ரெஸ்டோரேஷனுக்கு பிறகு(பழைய நிலைக்கு கொண்டுவந்த பிறகு) கிரிக்கெட் விளையாட்டு தன் பால் நிறைய சூதாடிகளின் கவனத்தை திருப்பியது. இவர்கள் பெரிய பந்தயங்களைக்கொண்டு ஆடத் துவங்கினர். 1664 ஆம் ஆண்டு "கவேலியே" நாடாளுமன்றம் கேமிங் ஆக்ட் 1664 நடைமுறைக்கு கொண்டுவந்தது. இந்த சட்டம் பந்தய பணத்தின் அளவை £100 ஆக குறைத்தது. பெரும் புதையலாக அந்த காலத்தில் கருதப்பட்ட இந்த தொகை[1] தற்போது £வார்ப்புரு:Formatprice க்கு சமம் ஆகும்வார்ப்புரு:Inflation-fn. 17 ஆம் நூற்றாண்டின் முடிவுக்குள் கிரிக்கெட் ஒரு சூதாட்ட விளையாட்டாக திகழத் துவங்கியது. 1967 ஆம் ஆண்டு சச்செக்சில் நடந்த ஒரு பெரிய போட்டியை பற்றி தெய்தித்தாளில் வெளிவந்த ஒரு அறிக்கை, பதினோரு பேர் கொண்டு ஆடப்பட்ட ஆட்டம் ஒரு பக்கத்திற்கு 50 கினியச்களை கொண்டு ஆடப்பட்டது என்று தெரிவிக்கிறது. [6].


1696 ஆம் ஆண்டு ஊடகச் சுதந்திரம் வழங்கிய பிறகு கிரிக்கெட் பற்றி முதல் முதலாக இப்படிப்பட்ட அறிக்கை தெய்தித்தாள்களில் வெளிவந்தது. ஆனால் நெடுங்காலத்துக்கு பிறகுதான் கிரிக்கெட் பற்றி தெளிவான மற்றும் அடிக்கடி தெரிவிக்க கூடிய அறிக்கைகளை அச்சகங்களால் பெற முடிந்தது. 18 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் செய்தி தாளில் வெளிவந்த செய்திகள் ஆட்டத்தை பற்றி குறிக்காமல் பேட்டிங்கை பற்றி மட்டும் குறிப்பிட்டு வெளிவந்தன.[1].

பதினெட்டாம் நூற்றாண்டின் கிரிக்கெட்

ஆதரவாளர்களும் விளையாட்டு வீரர்களும்

சூதாட்டம் தான் முதன் முதலில் ஆதரவாளர்களை இந்த விளையாட்டுக்கு அறிமுகப்படுத்தியது. சூதாடுபவர்கள் தங்கள் பந்தய பணம் பத்திரமாக இருப்பதற்காக தங்கள் சொந்த குழுவை ஏற்பாடு செய்து கொண்டனர். இந்த குழுக்கள் " கவுண்டி குழுக்கள்: என்று அழைக்கப்பட்டன. இவை 1660 ஆம் ஆண்டு ரெஸ்டோரேஷனுக்கு பிறகு உருவாக்கப்பட்டன. கவுண்டி பெயர்களை பயன்படுத்தி நடந்த முதல் விளையாட்டு 1709 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஆண்டிற்கு முன்னரே இப்படி பட்ட ஆட்டங்கள் நடந்திருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. 1697 ஆம் ஆண்டு நடந்த போட்டி சச்செக்சுக்கும் வேறொரு மாவட்டத்துக்கும் நடுவே நடந்திருக்கலாம்[1].


1725 ஆம் ஆண்டு முதல், இந்த ஆட்டத்திற்கு உயர்குடியினரும், வணிகர்களும் தான் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்தக் காரணத்தினால் கூட செய்திப்பிரிவினர் இந்த ஆட்டத்தை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர் என்று கூட சொல்லலாம். சார்லஸ் லெனாக்ஸ், ரிச்மண்டின் இரண்டாம் கோமான், சார் வில்லியம் கேஜ், ஏழாவது பரோநெட், ஆலன் பரோட்ரிக், எட்வர்ட் ஸ்டேட் போன்ற பெரும் புள்ளிகள் இந்த ஆட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த காலகட்டத்தில் தான், தாமஸ் வேமார்க் போன்ற தனிப்பட்ட ஆட்டக்காரரை பற்றி செய்தி வெளியீடுகள் செய்திகளை பரப்பின.[5].


இங்கிலாந்துக்கு வெளியே பரவிய கிரிக்கெட்

வட அமெரிக்காவுக்கு, பதினேழாம் நூற்றாண்டில் கிரிக்கெட், ஆங்கிலேயர்கள் மூலம் பரவியது[4], இது வட இங்கிலாந்துக்கு பரவுவதற்கு முன்னரே பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் உலகின் மற்ற இடங்களுக்கு இது பரவியது. மேற்கிந்திய தீவுகளுக்கு குடியேற்ற நாட்டினராலும்[4], இந்தியாவுக்கு ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தாலும் நூற்றாண்டின் முதல் பகுதியில் இது கொண்டுவரப்பட்டது.[5]. 1788 ஆம் ஆண்டில் குடியேற்றங்கள் ஆரம்பித்த உடனேயே இது ஆஸ்திரேலியாவில் பரவ துவங்கிவிட்டது.[5] 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இந்த ஆட்டம் நியூசிலாந்திலும் தென்னாப்பிரிக்காவிலும் பரவியது. [5]


புது சட்டங்கள்

மட்டை, பந்து, விக்கெட், ஆட்ட காலத்தின் அளவுகோல்கள், ஓவர்கள், எப்படி ஆட்டம் இழப்பது போன்ற அடிப்படை சட்டங்கள் காலம் காலமாக இருந்து வருகின்றன. 1728 ஆம் ஆண்டில், ரிச்மண்டின் கோமான் மற்றும் ஆலன் பரோட்ரிக் "ஆர்டிகல்ஸ் ஆப் அக்ரீமென்ட்" என்ற நடத்தை திட்டத்தை செயலாக்கப்படுத்தினர். இது பந்தயபணம் கொண்டு ஆடி ஹெயிப்பதற்கு பெரும் உதவியாக இருந்தது.[6].


முதன் முதலில் 1744 ஆம் ஆண்டில் கிரிக்கெட் சட்டங்கள் உருவாக்கப்பட்டு பின்னர்,1774 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டன. இந்த சமயத்தில் lbw, நடு ஸ்டம்ப், மட்டையின் அகலம் குறித்த சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்கள் கூடியிருக்கும் உயர் மனிதர்களுள் இருவரை நடுவர்களாக சீமான்கள் தேர்ந்தெடுத்த பின்னர், அந்த இரண்டு பேரும் எழகின்ற எல்லா தரப்பு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும், என்று கூறின. . இந்த கோட்பாடுகள் "ஸ்டார் அண்ட் கார்டர் க்ளப்" குழுவின் உறுப்பினரால் உருவாக்கப்பட்டது. இவர்கள் தான் லார்ட்சில் MCC யையும் 1787 ஆம் ஆண்டு நிறுவினர். MCC உடனடியாக சட்டத்தின் பாதுகாவலனாக தந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு இன்று வரை காலத்துக்கு ஏற்றவாறு பரிசீலனை செய்து புது சட்டங்களை ஏற்றி வருகின்றது[7].


இங்கிலாந்தில் தொடர் வளர்ச்சி

இங்கிலாந்து முழுவதும் பரவிய கிரிக்கெட் முதன் முதலில் 1751 ஆம் ஆண்டு யோர்க்ஷயரில் விளையாடப்பட்டது.[8] 1760 ஆம் ஆண்டுக்கு பின்னர் தரையில் உருட்டி விட்ட பந்து வீச்சு முறை (பவுல்சில் உள்ளவாறு) பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது. பந்து எறியும் முறை, லைனில் எப்படி வேறுபாடுகள் காட்ட முடியும், நீளம், வேகம் ஆகிய அனைத்திலும் மாற்றம் வந்தன.[1] 1772 ஆம் ஆண்டு முதல் மதிப்பெண் அட்டவணை வழக்கில் வந்தது. அது முதல் விளையாட்டு வளர்ச்சியைப்பற்றி நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.[9]


கிரிக்கெட் மட்டையை காண்பிக்கும் ஒரு ஓவியம் (படம் பெரிசாக தெரிய அதன் மீது கிளிக் செய்யவும்)

பதினெட்டாம் நூற்றாண்டின் மிக பிரபலமான சங்கங்கள் லண்டன் மற்றும் டார்ட்போர்டில்இருந்தன. இன்றும் நிலைத்து இருக்கின்ற ஆர்டிலேறி கிரௌண்டில் லண்டன் தனது ஆட்டங்களை ஆடியது. சச்செக்சில் இருந்த ச்ளிண்டன் ரிச்மண்டின் கோமானால் ஆதரிக்கப்பட்டிருந்த பொழுது அங்கு இருந்த நட்சத்திர வீரர் ரிச்சர்ட் நியூலாந்து ஆவார். மைடேன்ஹெட், ஹோர்ன்சர்ச், மெய்ட்ஸ்டோன், செவென்ஓக்ஸ் , ப்றோம்லே, ஆடிங்டன், ஹாட்லோ மற்றும் சேர்ட்செய் போன்ற பல புகழ் பெற்ற சங்கங்களும் இருந்தன.


ஆனால் ஹாம்ப்ஷயரில் இருந்த ஹாம்பெல்டன் சங்கம் தான் மிக பழமைவாய்ந்த சம்கமாக இருந்தது. இது 1756 ஆம் ஆண்டு மத குழுவினரால் துவங்கப்பட்டது. 1760 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சங்கம் தான் பெற்ற ஆதரவால் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு கிரிகெட் ஆட்டத்திற்கு நன்மை தந்ததுடன் MCC உருவாகவும் லோர்ட்ஸ் கிரிக்கெட் கிரௌண்ட் 1787 ஆம் ஆண்டில் திறக்கவும் காரணமாக இருந்தது. மாஸ்டர் பேட்ஸ்மேன் ஜான் ஸ்மால், வேக பந்து வீச்சாளர் தாமஸ் ப்றேட் போன்ற அற்புத ஆட்டக்காரர்களை ஹாம்பெல்டன் உருவாக்கியது. இவர்களின் கை தேர்ந்த போட்டியாளராக விளங்கியவர் சேர்ட்செய் மற்றும் சர்றேவின் பந்து வீச்சாளர், எட்வர்ட் "லம்பி" ச்டேவன்ஸ், இவரால் பரந்க்கும் பந்து வீச்சு முறை பிரபலம் அடைந்தது என்று கூறுகின்றனர்.


இந்த பந்து வீச்சை அதாவது பளைடெட், பிட்ச்ட், டெலிவெரி முறைகளை சமாளிக்க தான் நேர் மட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. "ஹாக்கி மட்டையை" போல் வளைந்து இருந்த மட்டை, பந்தை தரையில் உருட்டி விட்ட பொழுது தான் உதவியாக இருந்தது.


கிரிக்கெட் மற்றும் நெருக்கடி

பதினெட்டாம் நூற்றாண்டில், பெரிய அளவு போட்டிகள் ஏழு வருட போரின் காரணத்தால் நின்று போன போதுதான் கிரிக்கெட் முதன் முதலில் சர்ச்சையை சந்தித்தது. இது விளையாட்டு வீரர்கள் குறைந்ததாலும் முதலீட்டுதாரர்கள் குறைந்ததாலும் ஏற்பட்டது. ஆயினும் இந்த விளையாட்டு நிலைத்து இருந்தது. இடைப்பட்ட 1760 களில் "ஹாம்பெல்டன் காலம்" முறையே பிறந்தது.


19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிரிக்கெட் மேலும் ஒரு சர்ச்சையை சந்திக்க நேரிட்டது. நேபோலியானிக் போர்களால் கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டன. இந்த முறையும் ஆட்டக்காரர்கள் குறைவாலும் போதிய முதலீடுகள் இல்லாததாலும் ஆட்டம் தடைப்பட்டது. 1760 களில் நடந்ததிப் போலவே இந்த ஆட்டம் நிலைத்திருந்தது. மேலும் படிப்படியாக தனது இடத்தை 1815 ஆம் ஆண்டு முதல் தக்கவைத்துக்கொள்ள துவங்கியது.


ரீஜென்சி காலத்தில் சர்ச்சையின் மூலமாக MCC திகழ்ந்தது. இது லோர்ட் பிரெடெரிக் போக்லேர்க் மற்றும் ஜார்ஜ் ஒச்பல்டேஸ்டன் இடையே இருந்த பகைமை காரணத்தால் மூண்டு இருந்தது. 1817 ஆம் ஆண்டில் இவர்களிடையே இருந்த கேள்விகளும் பொறாமைகளும் மேச் பிக்சிங் சர்ச்சையை உருவாக்கியது. இந்த சமையத்தில் மிக நல்ல ஆட்டக்காரரான வில்லியம் லாம்பர்ட் லோர்ட்ஸ் கிரிக்கெட் ஆடுகளத்தில் அவர் ஆயுள் முழுதும் போட்டியில் கலந்துகொள்ள தடை செய்யப்பட்டார். பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே சூதாட்ட சர்ச்சைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.


1820 களில் ரவுண்ட் ஆர்ம் பவுலிங்கை சேர்க்க கோரி கிரிக்கெட் ஆட்டம் தானே ஒரு சர்ச்சையை உண்டி பண்ணியது.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் கிரிக்கெட்

1820 கலீல் ஷெப்பீல்டில் உள்ள தருநாளில் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது.

கவுண்டி சங்கங்கள் உருவாக்கப்பட்டதால் இந்த ஆட்டம் பல அடிப்படை மாற்றங்களை சந்திக்க நேரிட்டது. நவீன மாவட்ட சங்கங்கள்,1839 ஆம் ஆண்டில் சச்செக்சில் ஆரம்பித்து பத்தொன்பதாம் நோற்றாண்டு முழுதும் நிறுவப்பெற்றன.


இந்த முதல் மாவட்ட சங்கம் ஆரம்பித்த உடனேயே வில்லியம் கிளார்க் ஆல் இங்கிலாந்து லெவனை 1846 ஆம் ஆண்டு நிறுவினார். இது ஒரி பணம் சம்பாதிக்கும் வழியாக இருந்தாலும், அதுவரை உயர் தர ஆட்டக்காரர்கள் சென்றிராத மாவட்டங்களிலும் கிரிக்கெட் ஆட்டத்தை பிரபலம் அடையச் செய்தது இந்த முயற்சி. இதே போன்று பல அணிகள் உருவாக்கப்பட்டன. இதே முறை முப்பது ஆண்டு காலத்திற்கு நீடித்து இருந்தது. ஆயினும் கவுண்டிகளும் MCC யும் நிலைத்தே இருந்தன.


ரயில் போக்குவரத்தின் வளர்ச்சியால் மத்திய மற்றும் இறுதி பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிரிக்கெட் வளர்ச்சிப்பெற்றது. இதனால், நெடுந்தொலைவில் இருந்து இரு அணிகள் வந்து அதிக பயண சோர்வில்லாமல் போட்டியிட முடிந்தது. பார்வையாளர்களும் நீண்ட தூரம் பயணம் செய்து வந்து ஆட்டத்தை காண ஆரம்பித்தனர்.


1864 ஆம் ஆண்டு ஒரு புதிய பந்து வீச்சு புரட்சி ஏற்பட்டது. இதனால் ஓவர் ஆர்ம் பவுலிங் சட்டப்படுத்தப்பட்டது. இதே ஆண்டில் விஸ்டன் க்ரிக்கேடர்ஸ் அல்மனாக் முதன் முதலில் வெளிவந்தது.


"கிரேட் கிரிக்கெட்டர்" என்று அழைக்கப்பட்ட, W G கிரேஸ், முதல் ரக ஆட்ட அறிமுகத்தை 1865 ஆம் ஆண்டு பெற்றார். அவரது அபாரமான ஆட்டம் கிரிக்கெட்டை பெரிதும் வளர்ச்சி பெற செய்தது. அவர் பல நுண்ணியமான நுணுக்கங்களை ஆட்டத்துக்குள் புகுத்தினார். இது முக்கியாமாக பேட்டிங் நுட்பங்களில் புரட்சி ஏற்படுத்தியது.


சர்வதேச கிரிக்கெட் தொடங்குகிறது

படிமம்:1878AusTeamNiagraFalls.jpg
நயாகரா நீர் வீழ்ச்சியில் சுற்று பயணம் மேற்கொண்ட முதல் ஆஸ்திரேலிய குழுவின் படம் (1878)

முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி, USA மற்றும் கேனடாவுக்கும் இடையே 1844 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இந்த போட்டி நியூ யோர்க்கில் உள்ள St ஜார்ஜ்ஸ் கிரிக்கெட் க்ளப்பில் நடந்தது.[10]


1859 ஆம் ஆண்டில் ஆங்கிலே முன்னணி வீரர்களிக்கொண்ட குழு ஒன்று முதன் முதலில் வட அமேரிக்காவுக்கு கடல் தாண்டி சுற்றுபயணம் சென்றது. 1862 ஆம் வருடம் முதல் ஆங்கில அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டது.


1868 ஆம் ஆண்டில் மே மாதத்தில் துவங்கி அக்டோபர் வரை ஆஸ்திரேலிய அபார்ஜின்அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டது. இதுவே கடல் கடந்து போட்டியில் கலந்து கொண்ட முதல் ஆஸ்திரலிய அணியாகும்.


1877 ஆம் ஆண்டு ஆஸ்திரலியா சென்ற இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளை முழு ஆஸ்திரேலியன் XI க்கு எதிராக விளையாடியதி. இதை டெஸ்ட் போட்டியின் ஜனனம் என்று கருதலாம். இதற்கு அடுத்த ஆண்டே இங்கிலாந்தில் முதன் முறை சுற்று பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியர்கள் வெற்றி வாகை சூடி வீடு திரும்பினர். இந்த போட்டிகளில் டெஸ்ட் போட்டிகள் விளையாடப்படவில்லை என்றாலும், அதற்கு பின்னர் ஏராளமானவை விளையாடப்பட்டன. 1882 ஆம் ஆண்டில், தி ஓவலில், தி ஆஷேஸ் என்ற மிகப் பெரிய வரலாறு காணுகின்ற போட்டி உருவானது. உலகில் மூன்றாவது டெஸ்ட் விளையாடும் நாடாக தென்னாப்பிரிக்கா 1889 ஆம் ஆண்டில் உருவெடுத்தது.


தேசிய அளவு சாம்பியன்ஷிப்புகள்

1890 ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்கு பிறகு அதிகாரப்பூர்வமான கவுண்டி சாம்பியன்ஷிப்இங்கிலாந்தில் நிறுவப்பட்டது. இந்த அமைப்பை அடிப்படையாக கொண்டு மற்ற நாடுகள் தங்களை வழிமுறை படுத்திக்கொண்டன. 1892-93 இல் ஆஸ்திரேலியா ஷேப்பீல்த் கேடயத்தைநிறுவியது. தென்னாப்பிரிக்காவில் கூரி கோப்பை, நியூ சிலாந்தில் ப்ளங்கெட் கேடயம், இந்தியாவில் ரஞ்சி கோப்பையும் நிறுவப்பட்டன.


1890 ஆம் ஆண்டு முதல், முதல் உலகப்போர் வரை இருந்த காலம் ந இணைவில் கொள்ள வேண்டியதைக் இருக்கிறது. இது ஏனென்றால் ஒவ்வொரு அணியும் கிரிக்கெட்டை ஆட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆடின. மேலும் இது அமிதிக்காலமாக இருந்ததால் இந்த ஆட்டத்தை மேலும் ரசிக்க முடிந்தது. இந்த நிலை முதல் உலகப்போரால் குலைந்தது. இந்த காலம் கிரிக்கெட்டின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. இந்த சமயத்தில் கிரேஸ், வில்ப்ரெட் ரோட்ஸ், C B ப்ரை, K S ரஞ்சித்சின்ஜி, விக்டர் ட்ரம்பர்போன்ற தலையாய வீரர்கள் விளையாடினர்.


ஒரு ஓவரில் இருக்கும் பந்துகள்

நான்கு பந்துகளை கொண்டிருந்த ஒரு ஓவர் 1889 ஆம் ஆண்டில் ஐந்து பந்தாக மாற்றப்பட்டது. இது ஆறு பந்துகளாக 1900 ஆம் ஆண்டு மாற்றப்பட்டு இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகள் ஒரு ஓவருக்கு எட்டு பந்து என்று வைத்து சோதனை செய்து பார்த்தன. 1922 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மட்டும் ஓவர் ஒன்றுக்கு எட்டு பந்துகள் என்று மாற்றப்பட்டது. 1924 ஆமாண்டு நியூசிலாந்துக்கு பரவிய இந்த திட்டம் 1937 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கும் பரவியது. இங்கிலாந்தில் சோதனைக்காகவே இந்த முறை 1939 ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டது. இந்த சோதனை முறையை மீண்டும் 1940 ஆம் ஆண்டு நடத்தி பார்க்க வேண்டும் என்று நினைக்கப்பட்டது. அனால் முதல் ரக கிரிக்கெட் இரண்டாம் உலகப்போரினால்நிறுத்திவைக்கப்பட்டது. அது திரும்பவும் ஆட துவங்கியபோது இங்கிலாந்து ஓவர் ஒன்றுக்கு ஆறு பந்து என்ற முறையையே கையாண்டது. 1947 கிரிக்கெட் சட்டங்கள் ஆட்டத்துக்கு ஏற்றாவாறு ஒரு ஓவர் ஆறு அல்லது எட்டு பந்துகளை கொள்ளலாம் என்று விதித்தன. 1979/80 ஆஸ்திரேலியன் மற்றும் நியூசிலாந்து சீசங்கள் முடிவு பெற்றதும், ஆறு பந்து கொண்ட ஓவர் முறையே உலகெங்கும் பயன் படுத்த துவங்கினர். தற்போது, அதாவது 2000 ஆமாண்டு வெளிவந்த சட்டம் ஓவர் ஒன்றுக்கு ஆறு பந்து மட்டுமே என்று குறிப்பிடுகின்றது.


இருபதாம் நூற்றாண்டின் கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சி

1909 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இம்பீரியல் கிரிக்கெட் மாநாட்டில் (இவ்வாறு தான் முதலில் அழைக்கப்பட்டது ) முதலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா மட்டும் தான் உறுப்பினர்களாக இருந்தன. இரண்டாம் உலக போருக்கு முன்னர் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூ சிலாந்து டெஸ்ட் போட்டி நாடுகளாக இருந்தன. போருக்கு பின்னர் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டி நாடாக மாறியது. சர்வதேச ஆட்டம் இருபதாம் நூற்றாண்டில் முடிவில் மேலும்பல நாடுகள் சேர்ந்ததன் மூலம் சுவாரஸ்யம் ஆனது. அவற்றுள் முக்கிய மூன்று நாடுகள் இலங்கை, சிம்பாப்வே, மற்றும் வங்காள தேசம் ஆகும்.


இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும் டெஸ்ட் போட்டி முதல் ரக ஆட்டமாக திகழ்ந்தது. அனால் இதுவும் பல பிரச்சனைகளை சந்தித்தது. இங்கிலாந்தின்டவுக்லஸ் ஜார்டின் கால் கோட்பாட்டை வைத்து ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனின் ஆட்டத்தை "பாடிலைன்சீரிஸில்" (1932-33) சரிகாட நினைத்தார்.


தென்னாப்பிரிக்கா நீக்கப்பட்டது (1970-1991)

சர்வதேச கிரிக்கெட், தென்னாப்பிரிக்க இனவொதுக்கலால் பெரும் சரிவை கண்டது. 1961 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த பிரச்சனையால் தென்னாப்பிரிக்கா பொதுநலவாய நாடுகள் சங்கத்திலிருந்து வெளி வந்தவுடன், அது அந்த கால விதிமுறைப்படி சர்வதேச கிரிக்கெட் மாநாட்டை (ICC)விட்டும் வெளியேற நேர்ந்தது. 1968 ஆம் ஆண்டு கிரிக்கெட் இனவொதுக்கலை மேலும் தீவிரமாக எதிர்க்க துவங்கியது. இங்கிலாந்து அணியில், பேசில் ட'ஒலிவேரா என்ற ஒரு கருப்பு வீரர் இடம் பெற்றதால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தென்னாப்பிரிக்காவில் நடக்க இருந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. 1970 ஆம் ஆண்டு ICC உறுப்பினர் தென்னாப்பிரிக்காவை கால வரைமுறை இல்லாமல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். ஆனால், அந்த காலகட்டத்தில் உலகிலேயே மிக பலமான அணியாக தென்னாப்பிரிக்க அணிதான் இருந்தது.


உயர் தர போட்டியில் இருந்து விலக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் அணிகளாக திரண்டு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அதிக அளவு பணத்தை வாரி இறைத்தது. இந்த சுற்றுப்பயணத்தை "கழக காரர்களை சுடுப்பயணம்" என்று அழைத்தனர். இதற்கு ICC , தென்னாப்பிரிக்கா செல்கின்ற எந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் அவரை அட்டவணையில் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக்குவது என்ற முடிவை தெரிவித்தது. விளையாட்டு வீரர்கள் 1970 களில் மிக குறைவான சம்பளத்தைப் பெற்றதால் அவர்களில் பெரும்பாலோர் இந்த தென்னாப்பிரிக்க சுற்று பயணத்துக்கு ஒற்றுக்கொண்டனர். இவற்றில் ஆட்டத்திலிருந்து கூடிய விரைவில் ஒய்வு பெற இருந்த நிறைய வீரர்கள் கலந்து கொண்டனர். ஆதலால் அவர்களுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படவில்லை.


இந்த கலகக்காரர்களின் சுற்றுபயணம் 1980 களிலும் நடைப்பெற்றது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசியல் முன்னேறத் துவங்கியது. கூடவே இனவொதுக்கீடுகளும் முடிவுக்கு வர ஆரம்பித்தது. நெல்சன் மண்டேலாவின் தலைமைக்கு கீழ் "வானவில் நாடாக" திகழும் தென்னாப்பிரிக்கா சர்வதேச விளையாட்டுக்குள் மீண்டும் 1991 ஆம் ஆண்டு நுழைந்தது.

உலக தொடர் கிரிக்கெட்

உயர் தர வீரர்கள் சந்தித்த பண பிரச்சனையால் 1977 ஆமாண்டு மேலும் ஒரு சர்ச்சை எழுந்தது. இந்த சமயத்தில் ஆஸ்திரேலிய செய்தி வட்டாரத்தின் அதிபதியாக விளங்கிய கெர்ரி பாக்கர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்திலிருந்து தனக்கு தேவையான தொலைகாட்ட்சி உரிமத்தை பெறமுடியாமல் தவித்தார். குறைவான சம்பளம் வாங்கும் வீரர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த பாக்கர் உலகின் உயர் தர வீரர்கள் பலருடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதில் சர்வதேச கிரிக்கெட்டின் வழிமுறைக்கு வெளியே தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் ஆட இந்த வீரர்கள் ஒத்துக்கொண்டு இருந்தனர். தடை செய்யப்பட்டிருந்த சிறந்த தென்னாப்பிரிக்க வீரர்களுள் சிலரை உலக தொடர் கிரிக்கெட் தேர்வு செய்து மற்ற உயர் தார் ஆட்ட வீரர்களுக்கு எதிராக சர்வதேச அளவில் ஆட வைத்தது. இது 1979 ஆம் ஆண்டு வரைதான் நீடித்து இருந்தது. கலகார ஆட்டக்காரர்கள் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அனுமதிப்பெற்றனர். பலரும் அவர்களின் டேஹ்சிய அணி அவர்களை விட்டு விட்டு முன்னேறி இருப்பதையும் கண்டனர். இந்த உலக தொடர் கிரிக்கெட்டின் விளைவால் விளையாட்டு வீரர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது, வண்ணமயமான கருவித்தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. போட்டிகள் இரவு நேரங்களிலும் ஆடப்பட துவங்கின.


குறைந்த ஓவர்களை கொண்ட கிரிக்கெட்

1960 களில் ஆங்கிலேய மாவட்ட அணிகள் ஒரே ஒரு இன்னிங்க்ஸ் கொண்டு விளையாட துவங்கின. இதில் ஒரு இன்னிங்க்ஸிலே அதிக அளவு ஓவர்களை கொண்டு விளையாடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. 1963 ஆரம்பிக்கப்பட்ட இந்த வகை போட்டிகள் குறைந்த ஓவர்களை கொண்டு இருந்தாலும் 1969 ஆமாண்டு முதல் பிரபலம் அடைய துவங்கியது. தேசிய அளவில் உருவாக்கப்பட்ட லீக் மாவட்ட சாம்பியன்ஷிப்களில் நடந்த போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆரம்பித்தது.


இந்த முறையான ஆட்டத்துக்கு நிறைய விசிறிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகள் நிறைய நன்மைகளை கொண்டிருந்தன. இதனால் ஒரே நாளில் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதனை உடனடியாக தரமுடிகிறது. இது இளைஞர்கள் மத்தியிலும் நேரம் அதிகம் இல்லாதவர்கள் இடையிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் கிரிக்கெட் விளையாட்டில் பணமும் குவிய துவங்கியது.


முதல் குறைந்த ஓவர் கொண்ட சர்வதேச போட்டி 1971 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் களத்தில் நடைபெற்றது. இது மழை காரணத்தால் தவற விடப்பட்ட டெஸ்ட் போட்டிக்கு பதிலாக ஆரம்ப நாட்களில் விளையாடப்பட்டது. இது ஒரு சோதனையாக விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் முறையாக நடத்தப்பட்டது. ஆனால் இதுவே மிக பிரபலம் ஆனது. லிமிடட் ஓவர்ஸ் இன்டர்நேஷனல்ஸ் (LOI அல்லது ODI (ஒரு நாள் சர்வதேச போட்டிகள்)) அன்று முதல் இன்று வரை பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு ஆதரவாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் உலக கோப்பையை 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தியது. இதில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளும் பங்கேற்றது கொண்டன.


தொழில் நுட்பத்தின் அதிகரிப்பு

கிரிக்கெட் பற்றிய செய்திகளை நிறைய வெளியிட ஆரவத்தை தொலைக்காட்சிகள் மத்தியில் ஏற்படுத்தியது இந்த குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகள். புது வகையான தொழில் முறைகளை கொண்டு வெளியிடப்பட்ட LOI போட்டிகளின் வெற்றியைக்கண்டு அதே போல் டெஸ்ட் போட்டிகளையும் ஒளிபரப்ப ஆரம்பித்தனர். ஆழ்ந்த புள்ளி விவரவியல் தருதல், படம் மூலம் ஆராய்ந்து கூறுதல், ஸ்டம்ப்களில் சிறு கேமராக்கள் புகுத்துதல், ஆடு களத்தின் பல இடங்களில் புகைப்பட சாதனங்களைப் பொருத்துதல், விரைந்து பார்க்கக்கூடிய அளவிலான ஒளிப்பதிவு மற்றும் கணினியை கொண்டு ஒரு பந்தில் டெலிவரியை இன்னும் நுட்பமாக கவனிக்க உதவும் மற்றும் போட்டி நடுவரின் தீர்ப்புகளை புரிந்து கொள்ள உதவும் கிராபிக்ஸ் ஆகியவை தற்கால தொழில் நுட்பங்கள் ஆகும்.


தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியாவுக்கும் இடையே நடந்த டெஸ்ட் தொடரில், 1992 ஆம் ஆண்டில் முதன் முதலில் ரன் அவுட்களை தொலைக்காட்சி சாதனம் மூலம் சரி பார்க்க மூன்றாவது நடுவர்நியமிக்கப்பட்டார். இப்போது இந்த மூன்றாவது நடுவரின் திறன் ஸ்டம்ப்பிங், பந்தை பிடித்தல், எல்லையைத் தாண்டும் பந்தை கவனித்தல் ஆகிய இடங்களிலும் உதவியாக இருக்கிறது. இதுவரை மூன்றாம் நடுவர் lbw முறை ஆட்டம் இழப்பதை நிர்ணயம் செய்ய கூப்பிட படுவதில்லை. இப்பொழுது நேரடி அலைவரிசை மூலம் இதனை கண்காணிக்கும் வசதிகளும் வந்து விட்டன.(அதாவது, ஹாக்-ஐ) ஒரு பந்து போகும் திசையை துல்லியமாக கணிக்க இது பெரிதும் உதவுகிறது.

21 ஆம் நூற்றாண்டின் கிரிக்கெட்

போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஆகட்டும், அல்லது அதனை பார்வையிடுபவர்கள் ஆகட்டும் அல்லது அதனை படம் பிடித்து உலகிற்கு காட்டும் செய்தியாளர்கள் ஆகட்டும் கிரிக்கெட் என்றுமே இதனை அதிக அளவில் தான் பார்த்து வருகிறது.


ICC கிரிக்கெட்டின் வளர்ச்ஹிக்காக முழு மூச்சாக இரங்கி உலகமெங்கும் மேலும் பல டெஸ்ட் போட்டி நாடுகள் உருவாக பல முயற்சிகள் எடுத்து வருகின்றது. இந்த வளர்ச்சிக்காக ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளது ICC. 2004 ஆம் ஆண்டில் ICC சர்வதேச கோப்பை முதல் ரக கிரிக்கெட்டை முதன் முதலில் 12 நாடுகளுக்கு கொண்டுவந்தது.


ஜூன் 2001 இல் ICC "டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையை" அறிமுகப்படுத்தியது. மேலும் அக்டோபர் 2002 இல் இது "ஒரு நாள் சர்வதேச சாம்பியன்ஷிப் அட்டவணையையும் " அறிமுகப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த இரு அட்டவணைகளில் முதல் இடத்தை வகித்து வருவது ஆஸ்திரேலியாதான்.


கிரிக்கெட் தற்போது கண்டிருக்கும் புதுமை Twenty20(ட்வென்டி ட்வென்டி)ஆகும், இது பெரும்பாலும் மாலைநேர பொழுதுபோக்காக ஆடப்படுகிறது. இந்த ஆட்ட முறை பெரும் அளவில் பார்வையாளர்களை ஆட்டகளத்திற்கும் தொலைகாட்ட்சியின் பக்கத்தில் இழுத்து வந்திருக்கிறது. ஆரம்ப ICC ட்வென்டி 20 உலக கோப்பைபோட்டி, 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதனை பின் தொடர்ந்து மற்றொரு போட்டி 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்தியாவில் ட்வென்டி20 லீக்கள் - அதிகாரபூர்வம் இல்லாத இந்தியன் கிரிக்கெட் லீக், 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, அதிகாரபூர்வமான இந்தியன் பிரீமியர் லீக், 2008 இல் துவங்கப்பட்டது. இவற்றின் வருகை கிரிக்கெட்டின் வருங்காலத்தை பற்றி அலச பெரிதும் வழிவகுத்தன. [11][12][13][14]

FireFox / நெருப்பு நரி

நெருப்பு நரி என்று செல்லமாக அழைக்கப்படும் ForeFox உலவியையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். அதன் வேகமும், tabbed browsing ம் அனைவரையும் கவர்ந்தவை.

அதன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்த கீழ்க்கண்ட குறுக்குவழிச் சாவிகளைப் பயன்படுத்தலாம்.

---> Ctrl + Tab or Ctrl + PageDown: Cycle through tabs.
---> Ctrl + Shift + Tab or Ctrl + PageUp: Cycle through tabs in reverse.
---> Ctrl + (1-9): Switch to tab corresponding to number.
ஒரு tabக்கும் வேறு tabக்கும் மாறிமாறிச் செல்வதற்கு.




---> Ctrl + N: New window.
---> Ctrl + T: New tab.

---> Ctrl + L or Alt + D or F6: Switch focus to location bar.
---> Ctrl + Enter: Open location in new tab.
---> Shift + Enter: Open location in new window.

---> Ctrl + K or Ctrl + E: Switch focus to search bar.
---> Ctrl + O: Open a local file.

---> Ctrl + W: Close tab, or window if there's only one tab open.
---> Ctrl + Shift + W: Close window.

---> Ctrl + S: Save page as a local file.
---> Ctrl + P: Print page.
---> Ctrl + F or F3: Open find toolbar.

---> Ctrl + G or F3: Find next...
---> Ctrl + Shift + G or Shift + F3: Find previous...
---> Ctrl + B or Ctrl + I: Open Bookmarks sidebar.

---> Ctrl + H: Open History sidebar.
---> Escape: Stop loading page.

---> Ctrl + R or F5: Reload current page.
---> Ctrl + Shift + R or Ctrl + F5: Reload current page; bypass cache.
---> Ctrl + U: View page source.

---> Ctrl + D: Bookmark current page.
---> Ctrl + NumpadPlus or Ctrl + Equals (+/=): Increase text size.

---> Ctrl + NumpadMinus or Ctrl + Minus: Decrease text size.
---> Ctrl + Numpad[0] or Ctrl + 0: Set text size to default.
---> Alt + Left or Backspace: Back.

---> Alt + Right or Shift + Backspace: Forward.
---> Alt + Home: Open home page.

---> Ctrl + M: Open new message in integrated mail client.
---> Ctrl + J: Open Downloads dialog.

---> F6: Switch to next frame. You must have selected something on the page already, e.g. by use of Tab.
---> Shift + F6: Switch to previous frame.

---> Apostrophe ('): Find link as you type.
---> Slash (/): Find text as you type.


தொடர்புடைய சுட்டிகள் :


1. விண்டோஸ் எக்ஸ்ப்பி இயங்குதளத்துக்கான குறுக்குவழிச் சாவிகள்

2. மைக்ரோசாப்ட் வேர்ட் 2007க்கான குறுக்குவழிச் சாவிகள்

3. விண்டோஸ் 7 பீட்டாவின் குறுக்குவழிச் சாவிகள்

4. எக்ஸல் தொகுப்புக்கான குறுக்குவழிகள்

கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல் இணைக்க

கோப்புகளை பகிர கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல் . உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், கோப்புகள், பாடல்கள் வைத்து உள்ளீர்கள். அவற்றை உங்கள் உறவினர் / நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். கோப்பு பகிரும் தளங்கள் (File Sharing Sites) , பிகாஸா போன்ற புகைப்படம் பகிரும் தளங்கள் மூலம் இணையத்தில் ஏற்றி அவற்றை பகிர விருப்பமில்லை.

உங்கள் முக்கிய கோப்புகளை இல்ல கணினியில் (Home PC) வைத்து உள்ளீர்கள். இல்லத்தில் உள்ள கணினியின் கோப்புகளை உங்கள் அலுவலகத்தில் இருந்து அணுக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

ஒரு இணைய தளம் உருவாக்கி அதனை HTML கோப்புகளாக உங்கள் கணினியில் வைத்து உள்ளீர்கள். அவற்றை இணையத்தில் ஏற்றி இணையதளமாக அனைவரும் பார்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும் எனில் Web Hosting சேவை காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். அல்லது இலவச சேவைகளை தேடி அலைய வேண்டி வரலாம்.

இது போன்ற தருணங்களில் மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் உங்கள் கணினியையே இணைய வழங்கியாக (Web Server) மாற்றி செய்ய இயலும். இணைய உலாவிகளில் சிறப்பிடம் பிடித்த ஒபேரா (Opera) இதற்கான வசதியை Unite என்ற பெயரில் வழங்குகிறது. இத்தனை உபயோகிக்க ஆழ்ந்த இணையம் சார்ந்த அறிவு தேவை இல்லை.

இதனை இங்கு சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

எப்படி உபயோகிப்பது? என்பதனை இந்த வீடியோ எளிய முறையில் விளக்குகிறது.


மெனு பட்டைக்கு கீழே Panels என்பதனை கிளிக் செய்து மூன்றாவதாக உள்ள Unite கிளிக் செய்து கொள்ளுங்கள். File Sharing, Photo Sharing உள்ளிட்ட சேவைகளை நீங்கள் ஸ்டார்ட் செய்து கொள்ளவும். புதிய உறுப்பினர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள்.


எந்த Folder ஐ பகிர வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு ஒரு URL , Password கிடைக்கும். அதனை நீங்கள் பகிர வேண்டியவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் அந்த URL ஐ அணுகுவதன் மூலம் Password அளித்து உங்கள் கோப்புகளை பார்க்க / தரவிறக்கி கொள்ள முடியும். மேலே கொடுத்துள்ள வீடியோவை பாருங்கள் எளிய முறையில் புரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக கோப்புகள் / புகைப்படங்களை பகிரும் போது உங்கள் கணினி இயக்கத்தில், இணைய இணைப்புடன் இருக்க வேண்டும். உங்கள் கோப்புகள் வேறெங்கும் ஏற்ற (Upload) படுவதில்லை. உங்கள் கணினியில் இருந்தே நேரடியாக உபயோகப்படுத்த படுகிறது. எனவே உங்கள் கணினி இயக்கத்தில் (ON) இருப்பது முக்கியம்.