கிரடிட் கார்ட் வந்த புதிதில் அதன் 16 இலக்கு நம்பர் மற்றும் காலவதியாகும் மாதம் / வருடம் போன்ற விபரங்களை சிதம்பர ரகசியம் போல் காக்க வேண்டும். அந்த நம்பர், மற்ற விபரங்கள் வேறுயாருக்காவது தெரிந்துவிட்டால் போதும், யார் வேண்டுமானாலும் அதை வைத்துக் கொண்டு என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். இணையதளத்தில் யார் என்ன பொருள் தேவையோ வாங்கிவிடலாம். இப்படி கிரடிட் கார்ட் வாங்கி விட்டு தேவையில்லாமல் தொல்லையில் மாட்டியவர்கள் பலர். பணத்தை காப்பதை விட கிரடிட் கார்ட்டை பத்திரமாக பாதுகாக்க வேண்டியிருந்தது. கார்ட்டை தேய்க்க கடைக்காரனிடம் கொடுக்க கூட பயந்தனர். இதனாலே, பலர் கிரடிட் கார்ட் வாங்குவதற்கு அஞ்சினார்கள்.
இப்போது வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் ஒவ்வொரு கிரடிட் கார்ட்டுக்கும் 'CSC/CVV' என்ற மூன்று நம்பர் இருக்கிறது. இந்த எண்கள் கிரடிட் கார்ட் பின்புறத்திலேயே இருக்கும். பெரும்பாலும், இந்த எண்கள் தொலைப்பேசி மூலம் வங்கி சேவை நாடும் போதும், இணையதளத்தில் பொருள் வாங்கும் போதும் பயன்ப்படும்.
CSC / CVV என்றால் Card Verification Value / Card Security Code. இந்த மூன்று இலக்கு எண்கள் பெரும்பாலும் தொலைப்பேசி வங்கி சேவையிலும், இணையதளத்திலும் அதிகம் பயன்ப்படும். அதாவது, யார் கையில் கிரடிட் கார்ட் உள்ளதோ, அவர்கள் தான் தனக்கு சொந்தமாக பொருள் வாங்குகிறார் என்பதை சொல்லுவதற்கு இந்த எண்ணை பயன்படுத்துவார்கள்.
இந்த தகவலை எல்லாம் ஒரு பேப்பரில் குறிப்பு எடுத்துக் கொண்டு நம் பெயரில் யாராவது இணையத்தில் வாங்க முடியாதா என்று கேட்டால், கண்டிப்பாக முடியும். அதனால், கிரடிட் கார்ட் தேய்க்கும் போது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வது நல்லது.
ஒரு சில வங்கிகள் தன் வாடிக்கையாளர் கிரடிட் கார்ட் விபரத்தை திருடி இணையத்தில் வாங்க நினைத்தாலும், அதை தடுக்க பாதுகாப்பு வளையம் வைத்துள்ளது. உதாரணத்திற்கு, உங்கள் பெயர், கிரடிட் கார்ட் காலவதி மாதம், வருடம்,'CSC' எண் என்று எல்லா குறிப்புகள் எடுத்துக் கொண்டு இணையத்தில் வாங்க நினைத்தால், Secret Pin அல்லது 'Authorization Code' என்று கிரடிட் கார்ட் உரிமையாளிரின் செல்போனுக்கு அனுப்புகிறார்கள். இதனால் எல்லா தகவல் திருடினாலும் திருடனால் ஒன்றும் செய்யமுடியாது. இது போன்ற சேவையை எல்லா வங்கிகளும் எல்லா கிரடிட் கார்டுக்கும் தருவதில்லை. குறிப்பிட்ட ஒரு சில வங்கிகளே இது போன்ற சேவைகளை வழங்குகிறது.
ஒரு சில வங்கிகள் தன் வாடிக்கையாளர் 5000 ரூபாய் மேல் பொருள் வாங்கினால், கிரடிட் கார்ட் உரிமையாளர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். (SMS) அனுப்பி விபரத்தை உறுதி செய்துக் கொள்வார்கள். சில சமயம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கிரடிட் கார்ட் உரிமையாளர் தான் பொருள் வாங்கினாரா என்று உறுதி படுத்திக் கொள்வார்கள். ஒரு வேலை நீங்கள் எந்த பொருள் வாங்கவில்லை என்றால், வாடிக்கையாளர் சேவை தொடர்புக் கொண்டு தெரிவிக்க வேண்டும்.
அதே சமயம் வங்கியால் எல்லா வர்த்தக நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாது. அதனால் பெரிய அளவில் வாடிக்கையாளர் வாங்கும் போது இது போன்ற சேவையை வழங்குகிறது.
இப்படி வங்கிகள் தன் வாடிக்கையாளர் கிரடிட் கார்ட் சேவை பல பாதுகாப்பு வளையம் வைத்திருந்தாலும், கிரடிட் கார்ட் பார்த்த மாத்திரத்தில் போலி கிரடிட் கார்ட் தயாரிக்கும் நுதன திருடர்கள் இருக்க தான் செய்கிறார்கள்
No comments:
Post a Comment