எனது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.புது,பொலிவுடன் சமுகபார்வை இணையத்தளம் உங்களை நாடி வருகிறது....

Saturday, January 8, 2011

பாஸ்வேர்டுக்கு புதிய வழி


தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது.அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன. பொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் சொல்ல கட்டாயப் படுத்துகின்றன.இதுபோன்ற தளங் களை பயன் படுத்த அவர்கள் கேட்கும் விவரங் களையெல்லாம் கொடுத்து விட்டு கூடவே இ-மெயில் முகவரியையும் சமர்ப்பித்து நமக்கான பயன்பாட்டு பெயர் அதாவது யூசர் நேம் மற்றும் அதனை இயக்க கூடிய பாஸ்வேர்டு அதாவது கடவுச் சொல் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த தளத்தை எப்போது பயன் படுத்த வேண்டும் என்றாலும், பயன்பாட்டு பெயரை சமர்ப்பித்து கடவுச்சொல்லை தெரிவித்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.ஒரே ஒரு தளம் என்றால், இந்த முறையை பின்பற்றுவதில் எந்த சங்கடமும் இல்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல்வேறு தளங்களில் அவற்றின் சேவையை பயன்படுத்த இப்படி பல விதமான பயன்பாட்டு பெயரையும், கடவுச் சொல்லையும் உருவாக்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.இ-காமர்ஸ் தளங்கள், இ-மெயில் சேவை தளங்கள், பிரத்யேக ஆன் லைன் இதழ்கள், அரசு தளங்கள் என்று பலவற்றில் இப்படி தனித்தனியே நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.ஒவ்வொரு முறையும் அடையா ளத்தை உருவாக்க நேரத்தை செலவிட வேண்டியிருப்ப தோடு, பலவித அடையாளங்களை நிர்வகிப்பதும் சிக்கலாகிவிடுகிறது. கடவுச்சொல்லை மறந்து விடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே இணையவாசிகளின் தகவல் தேடும் அனுபவம் சுமை மிக்கதாக மாறிவிடுகிறது.இதற்கு தீர்வாக வந்திருக்கும் புதிய சேவைதான் ‘ப்ரீ யுவர் ஐடி’.‘ஓபன் ஐடி டாட் நெட்’ இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் உங்களைப்பற்றிய விவரங்களை சமர்ப்பித்து (ஒரே) ஒரு கடவுச்சொல்லை பெற்றுக் கொண்டீர்கள் என்றால் போதுமானது. வேறு எந்த இணைய தளத்தை பயன்படுத்தும்போதும், உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டது என்றால், ஓபன் ஐடி அடையாளத்தை சமர்ப்பித்தீர்கள் என்றால் போதுமானது.உங்களைப் பற்றிய விவரங்களை ஓபன் ஐடி வழங்கி நீங்கள் தளத்தின் உள்ளே செல்ல கதவைத் திறந்து விடும். இதன் மூலம் கட்டண சேவை போன்ற தளங்கள் ஒவ்வொன்றுக் கும் தனித்தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்க வேண் டியதில்லை. ஒரு கதவைத் திறந்தால், ஓராயிரம் கதவுகள் திறக்கும் என்பதுபோல, இந்த ஒரே ஒரு கடவுச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டெர்நெட் முழுவதும் உலா வரலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிய பாஸ்வேர்ட் சேவை போன்றதே இது. அதைவிட மேம்பட்டதாக இது இருக்கிறது என ஓபன் ஐடி மார்தட்டிக் கொள்கிறது.

No comments:

Post a Comment