எனது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.புது,பொலிவுடன் சமுகபார்வை இணையத்தளம் உங்களை நாடி வருகிறது....

Tuesday, February 15, 2011

ஸ்குரோல் வீல் ட்ரிக்ஸ்

ஸ்குரோல் வீல் ட்ரிக்ஸ்
உங்கள் இன்டர்நெட் பிரவுசரில் நிறைய தளங்களைத் திறந்து வைத்து பார்த்து பார்த்து தகவல்களைப் படித்து காப்பி செய்து கொண்டிருக்கிறீர்கள். மவுஸின் ஸ்குரோல் வீலை சுழற்றினால் என்ன நடக்கிறது. பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தில் மேலும் கீழுமாகச் செல்வீர்கள்.
அப்போது ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு வீலைச் சுழற்றிப் பருங்கள்; சுழற்றும் திசைக்கேற்ப நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளங்கள் அடுத்தடுத்து காட்சி அளிக்கும்.
சரி அடுத்து ஒரு தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கையில் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு வீலைச் சுழற்றிப் பாருங்கள். டெக்ஸ்ட் பெரிதாகும் அல்லது சிறியதாகும். இதனை அறியாத உங்களைச் சுற்றி இருக்கும் ஒரு சிலர் உங்களை ஆச்சரியத்துடனும் பார்க்கலாம்.

வேர்டில் பைலைத் திறக்க

வேர்டைத் திறக்கையில் ஏற்கனவே பயன்படுத்திய பைல்களின் பட்டியலில் நாம் செட் செய்ததற் கேற்ப 4 முதல் 9 பைல்கள் வரை காட்டும். இவை 1,2,3 என வரிசைப் படுத்தப்பட்டு மெனுவின் கீழாக இருக்கும். குறிப்பிட்ட பைலைத் திறக்க மவுஸின் கர்சரை அந்த பைலின் பெயர் மீது வைத்து கிளிக் செய்வோம். இன்னொரு குறுக்கு வழியும் உள்ளது. அந்த பைலுக்கு எந்த எண் தரப்பட்டுள்ளதோ அந்த எண்ணுக்கான கீயை (1,2,3 என்றபடி) அழுத்தினால் போதும். அந்த பைல் திறக்கப்படும்.

டபுள் லேயர் (Double Layer)
டிவிடி ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப்படுவதனை இச்சொல்லால் குறிக்கிறோம். எனவே வழக்கமான டிஸ்க்குகளின் கொள்ளளவுக்குப் பதிலாக இவ்வகை டிவிடிக்களில் 8.5 கிகாபைட் வரை இதில் தகவல்களைப் பதியலாம்.

ஹார்ட் டிஸ்க் (Hard Disk)
திறன் மற்றும் அமைப்பு கொண்ட டிஸ்க். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இணைத்து தரப்படும். இதில் தான் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் நீங்கள் உருவாக்கும் பைல்களும் பதியப்படும்.

ஸ்ட்ரீமிங் (Streaming)
எந்தவித வயர் இணைப்பு இன்றி ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை அதனை ஏற்றுக் கொள்ளும் சாதனத்திற்கு கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்துஅனுப்பப்படும் தொழில் நுட்பத்திற்கு இந்த பெயர் தரப்பட்டுள்ளது.

ஐ.பி. அட்ரஸ் (IP Address):
கம்ப்யூட்டர் நெட் வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக் கப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டருக்கு அடையாளம் தரும் முகவரி எண்.

மதர்போர்ட் (Motherbord)
பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப் பட்டு இயங்குகின்றன.

No comments:

Post a Comment